நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் அஜீத் குமாரை வைத்து இயக்கிய இயக்குநர்
சிவா அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து கிராமத்து பின்னணியில் படம்
உருவாக்கப்போவதாக கூறப்படுகிறது. இது ரஜினிக்கு மரண மாஸ் படமாக
அமையவேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
நடிகர்
ரஜினிகாந்த் கிராமத்து பின்னணியில் நடித்த அனைத்து படங்களுமே வசூலில்
சாதனை படைத்துள்ளன. குறிப்பாக கிராமத்து பின்னணியில் நடித்த முள்ளும்
மலரும், முரட்டுக்காளை, 16 வயதினிலே, ஜானி, எங்கேயோ கேட்ட குரல், தம்பிக்கு
எந்த ஊரு, எஜமான், வீரா, முத்து, படையப்பா என அனைத்து படங்களுமே100
நாட்களுக்கு மேல் ஓடிய படங்கள்.
அதேபோல், இயக்குநர் சிவா நடிகர்
கார்த்தியுடன் இணைந்து சிறுத்தை படத்தை எடுத்து அதிரடி காட்டியதோடு, நடிகர்
அஜீத் குமாரை வைத்து வீரம், விஸ்வாசம் என கிராமத்து பின்னணியில் அமைந்த
வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். அதிலும் விஸ்வாசம் திரைப்படம் அஜீத்
குமாரின் முந்தைய அனைத்து படங்களின் வசூலையும் புறந்தள்ளிவிட்டு வசூலில்
புதிய சாதனை படைத்தது.
இந்நிலையில்
இயக்குநர் சிவா, அடுத்ததாக ரஜினியை வைத்து கிராமத்து பின்னணியில் படத்தை
இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் சிவாவின் முந்தைய
திரைப்படமான விஸ்வாசம் தந்தை மகள் பாசப் பிணைப்பை மையமாக வைத்து
எடுக்கப்பட்டு மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதே பாணியில் சூப்பர்
ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து சிவா இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.


பிறந்தநாளில் சூட்டிங் : இந்த படத்தின் படப்பிடிப்பு ரஜினியின் பிறந்த நாளான 12.12.2019 அன்று துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் ரஜினிக்கு ஏற்றவாறும், அவருடைய ரசிகர்களுக்கு பிடித்தவாறு பக்கா மாஸ் திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஏனென்றால் இயக்குனர் சிவா நடிகர் அஜித்தை வைத்து எடுத்த நான்கு திரைப்படமும் பக்கா மாஸ் படங்களே.

கிராமத்து கதை: அதுமட்டுமில்லாமல் கிராமத்து கதை அம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு எத்தனையோ படங்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது குறிப்பாக எஜமான், முரட்டுக்காளை ஒரு மிகச் சிறந்த உதாரணம். இந்த முறை ரஜினி மற்றும் சிவா இணைந்து இந்தப் படத்தில் செய்யும் திரைக்கதை அமைப்பு அனைத்தும் ஏ,பி அண்ட் சி' சென்டர்கள் என அனைவருக்கும் பிடிக்கும் விதமாக இருக்கும் என்பதில் மிகப்பெரிய நம்பிக்கை உண்டு.

0 comments:
Post a Comment