• Latest News

    August 22, 2019

    ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் 24 ஆயிரம் கோடி ரூபாய் நட்டம்

    2009 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு காலப்பகுதி வரை ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் 24 ஆயிரம் கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக கோப் குழு இன்று -21- நாடாளுமன்றத்தில் முன்வைத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு விமானங்களை மாற்றுவதற்காக 2013 ஆம் மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் ஏ-350, 900 விமானங்கள் எட்டினை கையகப்படுத்துவற்கான உடன்படிக்கை நிறைவு செய்தமை தொடர்பான அறிக்கையையே கோப் குழுவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹெந்துன்நெத்தி நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.
    இதனுடன் தற்போது ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு 11 ஆயிரத்து 600 கோடி ரூபாய் வழிநடத்தல் நட்டமும் இதன் காரணமாக ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    இதனுடன் அரச வங்கிகள் மற்றும் இலங்கை கனிய எண்ணெய் கூட்டுதாபனத்திற்கும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் செலுத்த வேண்டிய மொத்த கடனின் அளவு 146 பில்லியன் ரூபாய் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் 24 ஆயிரம் கோடி ரூபாய் நட்டம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top