• Latest News

    August 25, 2019

    ரணில் தமக்கு சாதகமான செயற்பட 30 புதிய செயற்குழு உறுப்பினர்களை நியமிக்கிறார்

    அமைச்சர் சஜித் பிரேமதாசாவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க ஆட்சேபனை தெரிவிக்கும் முக்கியமான அமைச்சர்களுடன் பிரதமர் ரணில் மந்திராலோசனை நடத்தியுள்ளார்.
    இதன்படி 90 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட கட்சியின் செயற்குழுவுக்கு புதிதாக 30 உறுப்பினர்களை ரணில் நியமிக்கவுள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் ஏற்கனவே செயற்குழு இரண்டாக பிரிந்துள்ள நிலையில் ரணில் மேலும் 30 பேரை நியமிக்க ஏற்பாடுகளை செய்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுளளது.
    இதற்கான சட்ட ஏற்பாடுகள் இப்போது நடந்து வருகின்றன. சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பது தொடர்பில் செயற்குழுவில் பகிரங்க வாக்கெடுப்பை ரணில் நடத்தினால் பகிரங்கமாக யாரும் சஜித்தை ஆதரிக்கமாட்டார்களென கருதப்படுகிறது.
    இப்போது ரணிலால் நியமிக்கப்படவுள்ள செயற்குழு உறுப்பினர்கள் முப்பது பேரும் ஏற்கனவே செயற்குழுவில் இருக்கும் ரணில் சார்பானவர்களும் ஆதரவளிக்கும் பட்சத்தில் வேட்பாளர் தெரிவில் ரணிலின் கையே மேலோங்குமென சொல்லப்படுகிறது.
    ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழுவிலும் செயற்குழுவிலும் தீர்மானம் எடுக்கப்பட்டு அது கட்சித் தலைவரின் அங்கீகாரத்திற்கு செல்ல வேண்டும். பிந்திய இந்த நிலைவரம் கட்சிக்குள் இப்போதிருக்கும் நிலைமையை மேலும் மோசமாக்கலாமென ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ரணில் தமக்கு சாதகமான செயற்பட 30 புதிய செயற்குழு உறுப்பினர்களை நியமிக்கிறார் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top