• Latest News

    August 04, 2019

    கோரவிபத்து: களுத்துறை, வஸ்கடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் 6 பேர் உயிர் இழப்பு

    களுத்துறை, வஸ்கடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
    அதிகாலையில் ஏற்பட்ட இந்த விபத்தில் 56 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
    தனியார் பேருந்து ஒன்றும் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
    இன்று காலை 5.15 மணியளவில் எல்பிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தும் கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
    விபத்தில் 3 பெண்களும் 3 ஆண்களும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கோரவிபத்து: களுத்துறை, வஸ்கடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் 6 பேர் உயிர் இழப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top