• Latest News

    August 11, 2019

    மதுபோதையில் வாகனம் செலுத்திய 8147 சாரதிகள் கைது

    கடந்த 24 மணிநேர காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 180 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 
    மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை கடந்த 5 ஆம் திகதி ஆரம்பமாகியது. 
    அதன்படி நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான கடந்த 24 மணிநேர காலத்தில் 180 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
    கடந்த 5 ஆம் திகதி மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பமான தினத்தில் இருந்து இதுவரை 8147 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மதுபோதையில் வாகனம் செலுத்திய 8147 சாரதிகள் கைது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top