ஜனாதிபதி தேர்தல் குறித்து முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் பொதுஜன
முன்னணியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்சவுக்கும் இடையே இரகசியப்
பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றுள்ளதாக தொிவிக்கப்படுகின்றன.
இந்தச் சந்திப்பு குறித்து பஸில் ராஜபக்ச கருத்துத் தெரிவித்துள்ளதாவது,
மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கடந்த ஆட்சியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பங்காளிக் கட்சியாக இருந்தது. இந்தநிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுடன் மீண்டும் எமது ஆட்சி மலரப் போகின்றது. அதற்கு முன்கூட்டியே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவைப் பெறும்
வகையில் அதன் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் பேச்சு நடத்தியுள்ளேன்.
தமது கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய பின்னர்தான் இது தொடர்பில்
முடிவெடுக்கலாம் என்று அவர் என்னிடம் தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ளதாக தொிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment