சஹ்ரான் பயங்கரவாதம் புரிய அல்குர்ஆன் காரணமாக இருந்தது எனக் கூறுகின்றார்.
அப்படியெனில் விமல் வீரவங்க பௌத்த தம்மபதவின் அடிப்படையிலா பயங்கரவாத
செயற்பாடுகளில் ஈடுபட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்
கேள்வி எழுப்பியுள்ளார்.
பயங்கரவாதி சஹ்ரான் திரிபீடகத்தையோ, பைபிலையோ பின்பற்றியவர் அல்லர் எனவும்,
அல்குர் ஆனின் படி வஹாப் வாதத்தை பின்பற்றி நடந்தவர் எனவும் நாடாளுமன்ற
உறுப்பினர் விமல் வீரவங்ச இன்று -31- அவசரகாலச் சட்டத்தின் மீதான
விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்து பேசிய அவர்,
வஹாப் வாதம் என்றால் என்னவென்று முதலில் தெளிவுபடுத்துமாறு இந்த வஹாப் வாதிகளைப் பற்றிக் கதைகூறும் நபர்களிடம் கேட்கின்றோம்.
சஹ்ரான் பயங்கரவாதம் புரிய அல்குர்ஆன் காரணமாக இருந்தது எனக் கூறுவதாயின்,
1988 ஆம் 1989 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இந்த நாட்டில் விமல் வீரவங்ச
பயங்கரவாத செயற்பாட்டில் ஈடுபட்டது பௌத்த தம்மபதவின் அடிப்படையிலா என்று
கேட்டுக்கொள்ள விரும்புகிறேன் என்று குறிப்பிட்டார்.

0 comments:
Post a Comment