• Latest News

    August 27, 2019

    மட்டக்களப்பில் பதட்டம் - இராணுவம், பொலிஸார் குவிப்பு

    மட்டக்களப்பு, கல்வியங்காடு இந்து மயானத்தில் தற்கொலை குண்டுதாரி ஒருவரின் உடற்பாகங்களை புதைத்துள்ளமையின் காரணமாக தற்போது அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
    இந்நிலையில் கல்லடி பாலத்தினை சுற்றி பொலிஸார் மற்றும் கலகமடக்கும் பொலிஸார்,இராணுவத்தினர் போன்றோர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இதன் காரணமாக மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டத்திற்கான போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.
    மேலும், மட்டக்களப்பு - கொழும்பு,அம்பாறை,திருகோணமலை போன்ற பல பிரதேசங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
    தமிழ்வின் -





























    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மட்டக்களப்பில் பதட்டம் - இராணுவம், பொலிஸார் குவிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top