• Latest News

    August 04, 2019

    புதிய கூட்டணி வேண்டுமென்று கோருகிறார்கள் விமல், வாசு, உதய கம்மன்பில

    புதிய கூட்டணி ஒன்றை உருவாக்க வேண்டுமேன விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில போன்றவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகியன கூட்டணியாக இணைந்து கொண்டாலும் தங்களது கட்சி அடையாளத்தை பாதுகாக்க வேண்டுமாயின் விரிவான கூட்டணி அவசியம் என தெரிவித்துள்ளனர்.
    கூட்டு பொதுஜன முன்னணி அல்லது அவ்வாறான ஓர் பெயரின் அடிப்படையில் இந்தக் கூட்டணி உருவாக்கப்பட வேண்டுமென அவர்கள் கோரியுள்ளனர்.
    பொதுஜன முன்னணியுடன் உடன்படிக்கை கைச்சாத்திட்டு அந்த கட்சியில் போட்டியிட விமல் வீரவன்ச போன்றவர்களின் கட்சிகள் விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: புதிய கூட்டணி வேண்டுமென்று கோருகிறார்கள் விமல், வாசு, உதய கம்மன்பில Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top