ஐக்கிய தேசியக் கட்சியினால் ஜனாதிபதித் தேர்தலுக்கு களமிறக்கப்படும்
வேட்பாளர் யார் என்பது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வரை புதிய
கூட்டணி குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியாது என ஶ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ரணில் விக்ரமசிங்கவிற்கு
அறிவித்துள்ளார்.
அத்துடன், புதிய கூட்டணியின் செயலாளர் பதவி என்பது மிகவும் தீர்க்கமான
ஒன்று எனக் கூறியுள்ள ரவூப் ஹக்கீம், இந்தப் பதவி ஐக்கிய தேசியக் கட்சி
உறுப்பினர் ஒருவரிடம் இருப்பது முக்கியமானது எனவும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.

0 comments:
Post a Comment