-அஹமது அல்தாப் -
ஆரம்பத்திலேயே ஒரு சின்ன விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும்.
பாகிஸ்தான் என்பது கொஞ்சம் வித்தியாசமான நாடு. இலங்கையை எல்லாம் அதோடு ஒப்பிட்டால் நாம் எவ்வளவோ மேல்.
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு சம்பவமொன்றை கேட்டால் யாரும் பதறியடித்துக்
கொண்டு ஐயோ! அம்மா என்றெல்லாம் சப்தமிட்டு தலையில் அடித்து கொண்டு
அங்கலாய்ப்பதில்லை. குண்டுகள் வெடிப்பதெல்லாம் அங்கு மீம்ஸ் போஸ்ட்
வாசிப்பது போன்று சர்வசாதாரணம்.
லஞ்சம், ஊழல், கொலை, கொள்ளை கோத்திர சண்டைகள் எல்லாம் அங்கு வழமையான வாடிக்கைகள்.
இது யாவற்றையும் விட மிக முக்கியமான விஷயம் 30 வருடங்கள் இராணுவ ஆட்சியில் இருக்கும் நாடு பாகிஸ்தான்.
ஸுல்பிகார் அலி பூட்டோ, பெனாசீர் பூட்டோ , பாத்திமா பூட்டோ, முர்டஸா பூட்டோ
என்று ஆண்டாண்டு காலமாக ஆட்சி செய்யும் குடும்ப ஆட்சி ஒரு பக்கம்.
அய்யூப் கான்,ஸியாஹுல் ஹக், முஷாரப் என்று இராணுவ சர்வாதிகரிகளின் ஆட்சி ஒரு பக்கம்
என்னதான் ஊழல், அராஜகம், அட்டூழியம் நடந்தாலும் அவற்றை பற்றி அக்கறையே
இல்லாமல் திரும்பவும் பழைய ஆட்சியாளர்களுக்கே வாக்களிக்கும் மக்கள் ஒரு
பக்கம்.
ஜனநாயகம், சமூக நீதி, கருத்து சுதந்திரம், சமத்துவம், வெளிப்படைத்தன்மை
உரிமைகள்...வெண்டைக்காய், புடலங்காய் என்று எதுவுமே அங்கு வேலைக்காகாது.
Only ஊழல் தான்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில் தான் இம்ரான்கான் அரசியலுக்குள் நுழைகிறார்.
உலகமே காரித்துப்பிக் கொண்டிருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் டீமை 1992 ஆம்
ஆண்டு மொத்த உலகமே திரும்பி பார்ப்பக்க வைத்தவர் தான் இம்ரான்கான்.
ஒரே நாளில் முழு மொத்த பாகிஸ்தான் மக்களினதும் மனதிலும் இம்ரான்கான் பெயர்
மாத்திரம் தான் எதிரொலித்துக் கொண்டிருந்தது. இம்ரான்கான், இம்ரான்கான்,
இம்ரான்கான்......
1996 ஆம் ஆண்டு பாகிஸ்தான் தஹ்ரீகே இன்சாப் ( நீதிக்கான பாகிஸ்தானிய கட்சி) என்ற கட்சியை தொடங்கினார் இம்ரான்கான்.
என்னதான் லெஜன்ட், வேற லெவல் மனிதன் என்று மக்களின் மனதில் இருந்தாலும்
அரசியல் என்று வந்துவிட்டால் மக்கள் எப்போதும் எல்லா நாட்டிலும் ஒன்று
தான்.
ஊழல்வாதிகளுக்கு தான் வாக்காளிப்பார்கள்.
1997 பொதுத் தேர்தலில் போட்டியிட்ட லெஜன்ட், சூப்பர் ஸ்டார்
இம்ரான்கானுக்கு கிடைத்தது........ clean balled. ஒரு ஆசனம் கூட கிடையாது.
அவமானப்பட்டு, அசிங்கப்பட்டு மீண்டும் 5 வருடங்களுக்கு பின்னர்
போட்டியிட்டால் இம்ரான்கானுக்கு மக்கள் வழங்கிய தீர்ப்பில் பெரும்
முன்னேற்றம். கிடைத்ததே ஒரே ஒரு ஆசனம் தான்.
என்ன மக்கள் இவர்கள், அவ்வளவு அவர்களுக்காக செய்த ஒரு லெஜன்ட், ஒரு ஹீரோவை இதைவிடவா அவமானப்படுவார்கள்.
இம்ரான்கான் உடைந்து போகவில்லை, நம்பிக்கையிழந்து அரசியல் வாழ்விலிருந்து விலகி ஓடிவிட வில்லை.
எழுந்து நின்றார். அவமானப்பட்டார், 2007 இல் இராணுவ சர்வாதிகரி
முஷரப்பின்னால் சிறைக்குள் சென்றார். பஞ்சாப் பல்கலைக்கழக மாணவர்
ஊர்வலத்தில் மாணவர்களிடம் அடிவாங்கினார்.
ஆனாலும் ,
சற்றும் இம்ரான்கான் தளரவில்லை.
ஊர் ஊராக சென்றார், மக்களிடம் பேசினார். தலிபான்களோடு பேச்சுவார்த்தைக்கு
செல்வதே சிறந்த தீர்வென்றார். அமெரிக்காவை கண்டித்து அறிக்கை விட்டார்.
எல்லோருக்கும் சமத்துவம் வேண்டும் என்றார். சிறுபான்மையினருக்கு
ஆதரவளித்தார்.
22 வருடங்களுக்கு பின்னர் இம்ரான்கான் வேறொரு மனிதராகவே மாறி விட்டார்.
2018 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாகிஸ்தான் வரலாற்றிலே இத்தனை வருடங்கள்
எந்தவொரு தனிக்கட்சியும் எடுத்தில்லாத வாக்குகளை இம்ரான்கானின் கட்சி
எடுத்தது. ஒரே போடாக எல்லாருக்கும் ஷாக் கொடுத்தார். 17 மில்லியன்
வாக்குகள் .
இம்ரான்கானின் கதை ஏன் நமக்கு இப்போது.... இம்ரான்கான் என்று எழுதப்பட்ட
ஒவ்வொரு இடங்களிலும் jvp என்று போட்டு வாசித்து பாருங்கள் விஷயம்
துலங்கும். இம்ரான்கான் பாகிஸ்தானில் பட்ட கஷ்டங்களை தான் ஜேவிபியும்
கண்டிருக்கிறது.
32 வருடங்களுக்கு மேல் கஷ்டப்பட்டு மிகப் பெரும் சக்தியாக வளர்ந்து விட்டது.
இது தான் சரியான தருணம், இது தான் சரியான முடிவெடுக்க வேண்டிய இடம்.
ஊழல்வாதிகளால் ஆளப்பட்டு ஆளப்பட்டு உணர்ச்சியே இல்லாமல் ஆகி விட்டோம்.
ஊழலில்லாத தேசத்தை கொஞ்சம் பார்க்கலாம். உங்கள் வாக்கு யாருக்கு.....

0 comments:
Post a Comment