• Latest News

    August 09, 2019

    கோத்தபாய ராஜபக்ஷவை சுமந்திரன் சந்தித்துப் பேச்சுவார்த்தை

    முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
    நேற்று முன்தினம் கோத்தபாயவை நேரில் சென்று சுமந்திரன் உரையாடியுள்ளார். இதன்போது பல்வேறு உறுதிமொழிகளை கோத்தபாய முன்வைத்துள்ளார்.
    ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிக்க வேண்டும் என கோரிய கோத்தபாய, ஜனாதிபதியானால் இனப்பிரச்சினைக்கான தீர்வினை பெற்றுத்தருவதாக உறுதியளித்துள்ளார்.
    இலங்கையில் புதிய அரசியலமைப்பு சாத்தியமில்லை. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறக்கூடியதாக இருந்த சமகால அரசாங்கம் ஆரம்பத்தில் ஏன் அதை செய்யாமல் தவிர்த்தது என்று கோத்தபாய கேள்வி எழுப்பினார்.
    தமிழ் தேசிய கூட்டமைப்பை ரணில் விக்கிரமசிங்க ஏமாற்றியுள்ளார். தான் வாக்குறுதியளித்தால் அதை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்றும் கோத்தபாய தெரிவித்துள்ளார்.
    13வது திருத்தத்தில் காணி - பொலிஸ் அதிகாரங்கள் சாத்தியமில்லை ஆனால் அவ் அதிகாரத்திற்கு மாற்று ஏற்பாடு ஒன்றை கண்டு முழுமையாக அமுல்படுத்துவேன்.
    சுமார் இரண்டு மணித்தியாலத்திற்கு மேலாக இந்த கலந்துரையாடல் நீடித்தது. இதன்போது, கலந்துரையாடப்பட்ட மேலதிக விபரங்களை சம்பந்தப்பட்ட தரப்புக்கள் வெளியிடவில்லை.
    எனினும், இந்த சந்திப்புக்களின் தொடர்ச்சியாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை வார இறுதியில் கோத்தபாய சந்திப்பார் என புளொட்டின் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்.
    தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான புளொட்டின் தலைவர் த.சித்தார்த்தனும் நேற்று முன்தினம் கோத்தபாயவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கோத்தபாய ராஜபக்ஷவை சுமந்திரன் சந்தித்துப் பேச்சுவார்த்தை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top