• Latest News

    September 04, 2019

    நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சு.க ஒழுக்காற்று நடவடிக்கை

    ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 5 தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். 
    கொழும்பில் இன்று (04) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். 
    அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷமன் யாபா, எஸ்.பீ.திஸாநாயக்க, விஜித் விஜயமுனி சொய்சா, டிலான் பெரேரா மற்றும் ஏ.எச்.எம் பௌசி ஆகியவர்களுக்கு எதிராக இந்த தீர்மானம் கட்சியால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 
    அதனுடன் தொடர்புடைய கடிதங்கள் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சு.க ஒழுக்காற்று நடவடிக்கை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top