• Latest News

    December 07, 2025

    இலங்கையர்களாக மாறிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் - மேலோங்கும் மனிதாபிமானம்

    இலங்கையில் ஏற்பட்ட பேரிடரின் பின்னர் வழமை நிலைக்கு திரும்பும் வகையில் மக்கள் முயற்சித்து வருகின்றனர்.

    இந்நிலையில் பெரும் சேதங்களுக்கு உள்ளான பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

    பாதிப்பு உள்ளாகாத பகுதிகளிலுள்ள பெருமளவு மக்கள் ஒன்று திரண்டு பல நகரங்களை தன்னார்வமாக துப்பரவு செய்து வருகின்றனர். மற்றுமொரு பகுதியினர் தேவையானவர்களுக்கு நிவாரணங்களை வழங்கும் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

    இவ்வாறான நிலையில் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்ட வெளிநாட்டுவர்கள், இலங்கையர்களாக மாறி களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர். ஆண்கள், பெண்கள் என்ற பேதமின்றி பெருமளவு சுற்றுலா பயணிகளின் வீடுகள், நகரங்களை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பேரிடரின் போது இலங்கையில் மனிதாபிமானம் மேலோங்கியுள்ளமைக்கு இவை முன்னுாதாரணங்களாகும். 





     

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கையர்களாக மாறிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் - மேலோங்கும் மனிதாபிமானம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top