எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும்
போட்டியிடும் என அதன் பொது செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு
அறிவித்துள்ளார்.
அந்த கட்சியின் ஊடக பேச்சாளர் வீரகுமார் திஸ்ஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
விரைவில்
ஜனாதிபதி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும்
நிலையில், பிரதான கட்சிகள் ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்து வருகின்றன.
எனினும்,
ஐக்கிய தேசியக் கட்சியும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான
சுதந்திர கட்சியும் ஜனாதிபதி தேர்தல் குறித்து உத்தியோகபூர்வமாக
இதுவரையிலும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
குறிப்பாக
சுதந்திர கட்சியில் இருந்த பலர், மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன
கட்சியுடன் இணைந்துகொண்டுள்ள நிலையில், மைத்திரி தரப்பு எதிர்வரும்
ஜனாதிபதி தேர்தலில் யாருக்க ஆதரவு தெரிவிக்கும் என்ற கேள்வியே
எழுந்திருந்தது.
இந்நிலையில், அண்மையில் இடம்பெற்ற சுதந்திர கட்சியின் மாநாட்டில் பேசிய ஜனாதிபதி, எதிர்வரும் 2020ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்க போவதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே,
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் போட்டியிடும்
என அதன் பொது செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக
தகவல்கள் வெளியாகியுள்ளன.
0 comments:
Post a Comment