• Latest News

    September 26, 2019

    மரத்தில் ஏறிப் போராடும் தாயும், மகள்மார்களும் - பலாங்கொடையில் சம்பவம்

    பலாங்கொடை கபுகலை பகுதியில் வசிக்கும் தாய் ஒருவரும் புதல்விகள் இருவரும் நீதிமன்ற உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மரம் ஒன்றின் மீதேறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இவர்கள் சற்று முன்னர் இவ்வாறு மரத்தில் ஏறி ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கபுகலை பகுதியில் அரசாங்கத்திற்கு சொந்தமான காணியொன்றில் சட்டவிரோதமாக குடியேறி வசித்து வந்துள்ளனர் என தெரிவித்து அப்பகுதி கிராம உத்தியோகத்தரால் பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    இந்த வழக்கினை விசாரணை செய்ய நீதவான் நீதிமன்றம் அவ்விடத்தினை விட்டு வௌியேறுமாறு அறிவித்திருந்தது.

    எனினும் குறித்த தாய் அவ்விடத்தினை விட்டு வௌியேறாமல் இரத்திணபுரி மாவட்ட மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

    இந்நிலையில் இன்றைய தினம் வழக்கினை விசாரணைக்கு எடுத்துகொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றமும் அவ்விடத்தினை விட்டு வௌியேறுமாறு அறிவித்துள்ளது.

    இதனை ஏற்க மறுத்த 35 வயதுடைய இரு புதல்விகளின் தாயார், தன்னுடைய புதல்விகளுடன் மரத்தில் ஏறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

    தனக்கு வசிப்பதற்கு இடமில்லை எனவும் அரசாங்கம் அதற்குரிய ஏற்பாடுகளை செய்து தரவேண்டும் எனவும் வலியுறுத்தி குறித்த தாய் மரத்தில் ஏறி எதிர்ப்பினை வௌிப்படுத்தியுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மரத்தில் ஏறிப் போராடும் தாயும், மகள்மார்களும் - பலாங்கொடையில் சம்பவம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top