2019 ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெற்றதை தொடர்ந்து
ஜனாதிபதி தேர்தலின் போது சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளித்து வந்த முன்னணி
அமைச்சர்களான மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம, அஜித் பி பெரேரா மற்றும்
ராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன ஆகியோர் தமது பதவிகளை விட்டு
விலகியுள்ளனர்.
ஏற்கனவே சஜித் பிரேமதாஸ தமது அமைச்சு பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
இதனையடுத்து
சஜித்துக்கு ஆதரவாக செயற்பட்ட அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவும் தமது பதவியை
விட்டு விலகுவதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment