• Latest News

    November 20, 2019

    பத்து வருடங்களின் பின்னர் பாகிஸ்தானில் மீண்டும் டெஸ்ட் போட்டிகள்

    பத்து வருடங்களின் பின்னர் பாகிஸ்தானில் மீண்டும் டெஸ்ட் போட்டிகள் இடம்பெறவுள்ளன. இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு மேற்கொள்ளவுள்ள கிரிக்கெட் சுற்று பயணத்தின் மூலம் இது சாத்தியமாகியுள்ளது. 
     
    பாகிஸ்தானுக்கு டிசம்பர் மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி சர்வதேச கிரிக்கெட் பேரவையின், டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக அந்நாட்டு அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
     
    இந்த விடயத்தை இலங்கை கிரிக்கெட்  சபையும் உறுதிப்படுத்தியுள்ளது.
    தொடரின் முதல் போட்டி ராவல்பிண்டி நகரில் டிசம்பர் மாதம் 11ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதோடு, இரண்டாவது போட்டி டிசம்பர் மாதம் 19ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி வரையில் கராச்சி நகரில் இடம்பெறவிருக்கின்றது.
     
    பாகிஸ்தானில் 2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியினை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்கள் அந்நாட்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதில் பாரிய சிக்கல்களை உருவாக்கியிருந்தன.
     
    எனினும், இலங்கை அணியின் அண்மைய பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது இடம்பெற்ற மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர்கள் அந்நாட்டில் கிரிக்கெட் போட்டிகள் மீள இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பத்து வருடங்களின் பின்னர் பாகிஸ்தானில் மீண்டும் டெஸ்ட் போட்டிகள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top