பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவசரமாக அமைச்சர்களை சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய தினம் பிற்பகல் வேளையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அலரி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக பிரதமர் அலுவலகத்தின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும்
காலங்களில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பின்
போது கலந்துரையாடப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதே வேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது பதவியை ராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளார்.
பெரும்பாலும் நாளைய தினம் பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்வார் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளைய தினம் புதிய அமைச்சரவை பதவிப் பிரமானம் செய்துகொள்வதற்காக இடமளிக்கும் வகையில் அவர் இவ்வாறு பதவி விலகுகின்றார் என தெரிவிக்கப்படுகிறது.
புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

0 comments:
Post a Comment