• Latest News

    November 17, 2019

    இலங்கை தேர்தல் முடிவுகளில் குழப்பம்: இரு அரசு தளங்களில் வெளியாகும் மாறுபட்ட தகவல்கள்

    இலங்கை ஜனாதிபதி தேர்தல் சனிக்கிழமை முடிந்து உடனே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பொது ஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலை வகித்து வந்தார்.
    ஆனால், தமிழர் பகுதிகளில் தேசிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாச பெற்ற அபார வாக்கு முன்னிலை அவருக்கு ஒட்டுமொத்த முன்னிலையை பெற்றுத் தரத் தொடங்கியது.

    இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகும் அதிகாரபூர்வ பக்கத்தில் சஜித் பிரேமதாஸ முன்னிலை வகிப்பதாகவும், அரசாங்க தகவல் திணைக் களப் பக்கத்தில் கோட்டாபய முன்னிலை வகிப்பதாகவும் முரண்பட்ட செய்திகள் வெளியாகின்றன. 

    தற்போதைய நிலவரப்படி தேர்தல் முடிவுகள் பக்கத்தில் சஜித் பிரேமதாஸ 51.27 சதவீத வாக்குகளும், கோட்டாபய 41.96 சதவீத வாக்குகளும் பெற்றதாக செய்தி இருக்கிறது.

    இதற்கிடையே தான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டதாகவும், வெற்றியை அமைதியான முறையில் கொண்டாட வேண்டும் என்றும் கோட்டாபய ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளதாக பிபிசி செய்தியாளர் அசம் அமீன் ட்வீட் செய்துள்ளார். 
    BBC -
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கை தேர்தல் முடிவுகளில் குழப்பம்: இரு அரசு தளங்களில் வெளியாகும் மாறுபட்ட தகவல்கள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top