கேகாலையில் தமிழ் பிரதேசத்தில் குண்டர்கள் சிலர் புகுந்து தமிழர்களின் வீடுகள் மீது தாக்குல் நடத்துவதாக தெரிய வருகிறது.
எட்டியந்தோட்டை கணேபல்ல தோட்டத்திற்குள் இன்று இரவு நுழைந்த கும்பல், அங்குள்ள தமிழ் மக்களின் சில வீடுகளை சேதப்படுத்தியுள்ளனர்.
அங்குள்ள சில பெண்களிடம் அநாகரிகமாக நடக்க முயற்சி செய்ததாக கணேபல்ல பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
யாருக்கு இம்முறை வாக்கு அளித்தீர்கள் என்று கேட்டு மிகவும் அநாகரிகமாக குறித்த கும்பல் செயற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் குறித்து எட்டியந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
இந்நிலையில்,
குறித்த விடயம் தொடர்பில், கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், பொதுஜன
பெரமுன கட்சியின் மாவட்ட அமைப்பாளருமான கனக ஹேரத் கருத்து தெரிவிக்கையில்,
“இது இரண்டு குடும்பங்பளுக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினை
எனவும், சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும்”
கூறியுள்ளார்.
அதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் கேகாலை பொலிஸாரை
தொடர்பு கொண்டு வினவிய போது, இவ்வாறன சம்பவம் ஒன்று பதிவாகியிருப்பதாகவும்,
அந்த இடத்திற்கு பொலிஸார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், கூறியுள்ளனர்.







0 comments:
Post a Comment