• Latest News

    December 02, 2019

    மாற்றம் ஒன்றே நிந்தவூாின் அபிவிருத்திக்கு வழியாகும் - நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹீர்

    (நமது அலுவலக நிருபர்)
    போினவாதிகள் முஸ்லிம்களை இலக்கு வைத்தே அரசியல் நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றார்கள். முஸ்லிம்களைப் பற்றி பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டு, முஸ்லிம்களை நாட்டுப் பற்று இல்லாதவர்கள் போன்றும், பயங்கரவாதிகள் போன்றும் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். ஆதலால், இதற்கு எதிராக நாம் செயற்பட வேண்டியுள்ளது. அதனால், முஸ்லிம்களுக்கு குரல் கொடுக்கக் கூடிய அரசியல் தலைவர்களின் கரங்களை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருந்து கொண்டிருக்கின்றோம்.

     நிந்தவூர் பிரதேசத்தில் குடிநீர் வசதி மற்றும் மின்சார வசதி இல்லாத குடும்பங்களுக்கு மேற்படி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நடவடிக்கைகள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியூதினின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  தற்போது நிந்தவூா் பிரதேசத்தில் முதற் கட்டமாக 400 பயனிகளுக்கு மேற்படி வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.  

    நிந்தவூர் 03ஆம், 14ஆம், 15ஆம் கிராம சேவகர் பிாிவுகளில் குடிநீர் வசதி மற்றும் மின்சார வசதி இல்லாதவர்களுக்கு மேற்படி வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்குாிய பற்றுச் சீட்டுக்களை வழங்கும் வைபவத்தில் உரையாற்றிய  நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹீர் மேற்கண்டவாறு தொிவித்தார்.

    அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
    இன்று எங்கள் மத்தியில் பல முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இருந்த போதிலும், முஸ்லிம்களுக்கு எதிராக அச்சமின்றி குரல் கொடுக்கக் கூடியவராக அகில இலங்கை மக்கள் காங்க்ரஸின் தலைவர் றிசாட் பதியூதீன் மாத்திரமே இருக்கின்றார். அவர் முஸ்லிம்களின் அபிவிருத்தி, வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் போன்றவற்றில் மிகவும் அக்கறையுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். அது மட்டுமல்லாது, முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதிகளினால் மேற்கொள்ளப்படும் அனைத்து அநியாயங்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்.

    இவ்வாறு இவர் செயற்பட்டுக் கொண்டிருப்பதன் காரணமாக, இவாின் குரலை நசுக்க வேண்டுமென்பதற்கான திட்டங்களை வகுத்து போினவாதிகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். சிங்களவர்கள் மக்கள் மத்தியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரை மோசமான ஒருவர் என்று காட்டுவதற்காக அத்துரலிய ரதன் தேரர் போன்ற பௌத்த இனவாத தேரர்களும், விமல்வீரவன்ச, எஸ்.பி.திஸாநாயக்க போன்ற இனவாத அரசியல்வாதிகளும், இவர்களின் இத்தகைய படுமோசமான செயற்பாடுகளை மேலும், மோசமாகக் காட்டுவதற்கு இரண்டு தனியார் தொலைகாட்சி நிறுவனங்களும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இத்தனைகை்கும் இவர் எந்தத் தவறையும் செய்யவில்லை.  தன்னுடைய சமூகத்திற்காக குரல் கொடுப்பதனைக் கூட பௌத்த இனவாதிகள் குற்றமாகக் காண்கின்றார்கள். பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவரை அரசியலிருந்து துரத்துவதற்கு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். 

    இன்று முஸ்லிம்களுக்கு தைாியமாக உண்மையை பேசிக் கொண்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியூதீனோடு வடக்கு, கிழக்கு மட்டுமல்லாது  இம்மாகாணங்களுக்கு வெளியே உள்ள முஸ்லிம்களும் அணி திரண்டு கொண்டுள்ளார். எதிர்வரும் பாராளுமன்றத்தில் இவாின் கைகளை இன்னும் பலப்படுத்த வேண்டுமென்று முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் முடிவெடுத்துச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றாா்கள். அந்த வகையில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அம்பாரை மாவட்டத்திலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போட்டியிட இருக்கின்றது.

    கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலின் பின்னர் அம்பாரை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கும், அதன் தலைமைக்கும் செல்வாக்கு அதிகாித்துள்ளது. அதனால், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இரண்டு ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புக்கள் இன்றைய களநிலவரப்படி இருக்கின்றது. அந்த அடிப்படையில் எமது நிந்தவுர் பிரதேசமும் அத்தேர்தலில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. அந்த அடிப்படையில் கடந்த பிரதேச சபைத் தேர்தலில் என் மீது கொண்ட நம்பிக்கையின் அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸை விட்டு விலகி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியி்ட்ட போது, நீங்கள் கட்சி என்று பார்க்காது, என்னை ஆதாித்து மூன்றாவது தடவையும் பிரதேச சபைக்கு தொிவு செய்து, தவிசாளர் பதவியை பெற்றுக் கொள்ளக் கூடிய நிலைமையை ஏற்படுத்ததினீர்கள்.

    நீங்கள் என்னை நம்பி அளித்த வாக்குகளுக்கு என்னால் முடிந்த அனைத்து அபிவிருத்திகைளையும் செய்து தந்துள்ளேன். மற்றவர்கள் போன்று கோடிக் கணக்கில் பணத்தைக் கொண்டு வீதிகளை மாத்திரம் அமைக்கவில்லை. வீதி முதல் பாடசாலைகள், பள்ளிவாசல்கள், வடிகான் வசதிகள் என முடிந்த வரை எல்லாத்துறைகளையும் அபிவிருத்தி செய்துள்ளோம். 

    நமது ஊர் 15 வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினரை பெற்றுள்ள போதிலும், இன்னும் பல அடிப்படை வசதிகளை பெற்றுக் கொள்ள முடியாத துர்பாக்கிய நிலையில் இருந்து கொண்டிருக்கின்றோம். இன்று எமது பாடசாலைகளில் வகுப்பறை மற்றும் நிர்வாகக் கட்டிடத் குறைபாடுகள் உள்ளன. ஒரு சில பாடசாலைகளுக்கு எமது ஊரைச் சேர்ந்த உயர் அதிகாாி ஒருவர் கட்டிடங்களையும், வேறு வசதி வாய்ப்புக்களையும் தமது பதவி மூலமாக செய்துள்ளார். அந்த கட்டிடங்களை திறப்பு விழாக்களில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டுவிட்டு, அக்கட்டிடங்களை நாமே கட்டினோம் என்று முகநூலில் விளம்பரம் தேடிக் கொண்டிருக்கின்றாா்கள். இந்த வங்குரோத்து அரசியலுக்கு முடீவ கட்ட வேண்டும். நமது ஊரும் அக்கரைப்பற்று, காத்தான்குடி போன்று அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமாயின், மாற்றம் ஒன்றைக் காண வேண்டும். அதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். இந்த முயற்சிக்கு ஊாில் உள்ள பல முக்கியஸ்தர்கள் ஆதரவு அளித்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் எங்களின் முயற்சிகளுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. 

    இவர்கள் 15 வருடங்களில் இந்த ஊரை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்று முறையாக திட்டமிடவில்லை. அதற்குாிய திறனும் அவர்களிடமில்லை. ஆதலால், ஏனைய பெயர் சொல்லக் கூடிய ஊர்களைப் போன்று எங்களின் ஊரும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமாயின் மாற்றம் ஒன்றே நமக்கான வழியாகும்.

    நிந்தவூரை மட்டுமல்ல, இவர்களுக்கு வாக்களித்து ஏனைய ஊர்களைக் கூட அபிவிருத்தி செய்ய அவர்களினால் முடியவில்லை. வெறுமனே கொங்கிறீட் வீதிகளையும், காபட் வீதிகளையும் அமைத்து விட்டு அபிவிருத்தி செய்து விட்டதாக பெருமை பேசிக் கொள்ளும் இந்த இழிநிலையை மாற்றியமைக்க கடந்த பிரதேச சபைத் தேர்தலில் எங்களோடு இணைந்தவர்களுடன் மீதமாக இருக்கின்றவர்களும் வந்து இணைந்து கொள்ளுமாறு அன்பான அழைப்பை விடுக்கின்றேன்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மாற்றம் ஒன்றே நிந்தவூாின் அபிவிருத்திக்கு வழியாகும் - நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹீர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top