• Latest News

    December 26, 2019

    இந்தியாவை இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கண்டித்துள்ளது

    குடியுரிமை சட்ட திருத்தம் அதை தொடர்ந்து .இந்தியாவில் அரங்கேறி வரும் அத்துமீறல்களுக்கு 57 நாடுகளை கொண்ட இஸ்லாமிய நாடுகளின் கூட்டைப்பு தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது.
    இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் அறிக்கையில்,
    இந்தியாவின் தற்போதைய நிலையை கூட்டமைப்பு கூர்ந்து கவனித்த வருவதாகவும் தேவை பட்டால் கூட்டமைப்பின் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க படும் என்றும்,  இந்தியா சிறுபான்மையினர் மற்றும் அவர்களின் வழிபாட்டு தலங்கள் விசயத்தில் சர்வதேச வழிகாட்டுதல்களை பின்பற்றி சிறுபாண்மை முஸ்லிம்களின் வாழ்வு உரிமையையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்த பட்டுள்ளது
    அண்மையில் இந்தியா இயற்றி இருக்கும் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் பாபர் பள்ளிவாசல் தீர்ப்பு போன்றவைகள் சர்வதேச இஸ்லாமிய சமுகத்தை கவலை கொள்ள செய்திருப்பதாக கூறும் அறிக்கை,  இந்தியா தனது நிலையை மாற்றி கொள்ளாவிட்டால் கூட்டமைப்பு தனது உறுப்பு நாடுகளோடு ஆலோசனை செய்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்யும் என்றும் கூறபட்டுள்ளது.
    இந்தியாவின் மொத்த வர்த்தகத்தில் 35 சதவீதம் கூட்டமைப்பு நாடுகளுடன் உள்ளது துபாய் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகள் பெருமளிவில் இந்தியாவில் முதலீடு செய்துள்ளது என்பதையும் இந்தியா உணரவேண்டும் என்று அறிக்கையில் கூறபட்டுள்ளது.
    குடியுரிமை திருத்த சட்டம் இஸ்லாமிய நாடுகளுடனான உறவை பாதிக்காது என்று மோடி டெல்லியின் ராம்லீலா மைதான கூட்டத்தில கூறிய சில மணி நேரத்தில் இந்த அறிக்கை வெளியிட பட்டது என்பது கவனிப்புக்கு உரியதாகும்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இந்தியாவை இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கண்டித்துள்ளது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top