• Latest News

    December 26, 2019

    நாங்கள் யாரும் தப்பிச் செல்லப்போவதில்லை - சம்பிக்க, ரணவக்க

    முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சரியான நேரத்தில் நீதிமன்றத்தில் தோன்றி விளக்கமளிப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
    பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜிதவை கைது செய்வதற்கு பொலிஸார் முயற்சி செய்து கொண்டிருக்கும் நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
    இது தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய சம்பிக்க, ரணவக்க,
    “நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, நீதிமன்ற உத்தரவை மீறப்போவதில்லை. அவருக்கு 30ஆம் திகதி வரை அதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. இதன்படி அவர் செயற்படுவார். முறையாக அவர் செய்ய வேண்டியதைச் செய்வார்.
    பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதென்பதற்காக அவ்வாறு செய்யத் தேவையில்லை. சரியான நேரத்தில் நீதிமன்றத்தில் தோன்றி விளக்கமளிப்பார். இந்த விடயம் குறித்து யாரும் குழப்பமடையத் தேவையில்லை. நாங்கள் யாரும் நீதிமன்றத்தை விட்டுத் தப்பிச் செல்லப்போவதில்லை. சவால்களுக்கு முகங்கொடுத்து நாங்கள் முன்னோக்கி செல்வோம்.
    அரசியல் ரீதியில் எம்மை முடக்குவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் மூலம் நாங்கள் சவாலாகவே இருக்கின்றோமென்றே அர்த்தப்படுகிறது. இது தொடர்பாக நாங்கள் பெருமையடைகிறோம்.
    நாங்கள் சுயாதீன நீதித் துறை மற்றும் சுயாதீன பொலிஸ் ஆகியவற்றை உருவாக்கினோம். இதன்படி சட்டம் முறையாக செயற்படுத்தப்படுமென நம்புகிறோம்” என்றார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நாங்கள் யாரும் தப்பிச் செல்லப்போவதில்லை - சம்பிக்க, ரணவக்க Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top