• Latest News

    December 25, 2019

    ராஜித சேனாரத்ன உடல்நலக் கோளாறு காரணமாக தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் - கைது செய்வதற்கு குற்றப் புலனாய்வு பிாிவினர் சபாநாயகருக்கு கடிதம்

    முன்னாள் சுகாதார அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன திடீர் உடல்நலக் கோளாறு காரணமாக தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
    வௌ்ளை வான் கடத்தல் சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியமை குறித்த வழக்கில் ராஜிதவுக்குக் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தால் நேற்றுப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
    இதனால் அவர் எந்த நேரத்திலும் கைதுசெய்யப்படலாம். இந்தநிலையிலேயே அவர் இன்று -25- வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
    இதற்கிடையில் ராஜிதவைக் கைதுசெய்ய அனுமதி கோரி சபாநாயகர் கரு ஜயசூரியவுக்குக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
    எனினும், முன்பிணை கோரி கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் மூன்றாவது தடவையாக ராஜித சேனாரத்ன தாக்கல் செய்திருந்த மனு எதிர்வரும் 30ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ராஜித சேனாரத்ன உடல்நலக் கோளாறு காரணமாக தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் - கைது செய்வதற்கு குற்றப் புலனாய்வு பிாிவினர் சபாநாயகருக்கு கடிதம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top