• Latest News

    January 25, 2020

    2019 ஜனாதிபதி தேர்தலில் அரசாங்க மற்றும் தனியார் ஊடகங்கள் பக்கச்சார்ப்பு பிரசாரங்களை மேற்கொண்டன - ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.

    2019 ஜனாதிபதி தேர்தலின் போது அரசாங்க மற்றும் தனியார் ஊடகங்கள் பக்கச்சார்ப்பு பிரசாரங்களை மேற்கொண்டதாக ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.

    ஜனாதிபதி தேர்தல் குறித்து அந்த குழுவின் இறுதி அறிக்கை இன்று வெளியிடப்பட்ட து. அதில் இலங்கை தேர்தல்கள் ஆணையம் சிறப்பாக பணி செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பேஸ்புக் பிரசாரம் கட்டுக்குள் இருக்கவில்லை. வெறுக்கத்தக்க பேச்சுக்கள், மற்றும் தேர்தல் பிரசாரத்துக்கான அதிக செலவுகள் மிதமிஞ்சி இருந்தன.
    தேர்தல்கள் ஆணையத்தின் அதிகாரங்கள் மட்டுப்பட்ட நிலையில் இருந்தன. எனவே சில விடயங்களை அந்த ஆணையகம் கையாளமுடியாத நிலை காணப்பட்டது.

    இந்த நிலையில் தேர்தல் பணிகளை சிறப்பாக செய்ய ஐரோப்பிய ஒன்றிய குழு 23 பரிந்துரைகளை செய்துள்ளது. அதில் தேர்தல்கள் ஆணையகத்தின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதும் ஒன்றாகும்.

    இதேவேளை ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவில் 27 அங்கத்துவ நாடுகளை சேர்ந்த 30 நீண்டகால பணியாளர்களும் 30 குறுகிய கால பணியாளர்களும் பணியாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 2019 ஜனாதிபதி தேர்தலில் அரசாங்க மற்றும் தனியார் ஊடகங்கள் பக்கச்சார்ப்பு பிரசாரங்களை மேற்கொண்டன - ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top