• Latest News

    January 03, 2020

    ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படைக்கு புதிய தளபதி நியமனம்

    ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான் அமெரிக்காவால் கொலை செய்யப்பட்ட நிலையில், அடுத்த தளபதி யார் என்பதை ஈரானின் உன்னத தலைவரான அயதுல்லா அலி கமேனி அறிவித்துள்ளார்.

    அமெரிக்கா இன்று ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டார்.

    இதையடுத்து உடனடியாக அடுத்த சில மணி நேரங்களில், துணை தளபதியாக இருந்த Esmail Qaani-ஐ தளபதியாக உன்னத தலைவர் அயதுல்லா அலிகமேனி அறிவித்துள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தளபதி குவாசிம் சுலைமானின் தியாகத்தைத் தொடர்ந்து, இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படையின் தளபதியாக Esmail Qaani நான் பெயரிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    இதற்கு முன் குவாசிம் படுகொலைக்கு காரணமானவர்களுக்கு நிச்சயம் தக்க பதிலடி காத்திருக்கிறது என்று அயதுல்லா அலிகமேனி தெரிவித்திருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதால் அமெரிக்காவை பழிவாங்குவதற்காகவா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படைக்கு புதிய தளபதி நியமனம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top