• Latest News

    February 08, 2020

    நிந்தவூர் அல் - அஷ்ரக் தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நிகழ்வு நாளை

    (எம்.எஸ்.எம்.ஸாகிர்)
    நிந்தவூர் கமு/கமு/ அல் - அஷ்ரக் தேசிய பாடசாலையின் இவ்வருடத்திற்கான இல்ல விளையாட்டு விழா நாளை ஞாயிற்றுக்கிழமை (09) பிற்பகல் 02.00 மணிக்கு பாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

    கல்லூரி அதிபர் ஏ. அப்துல் கபூர் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதார, ஊட்டச்சத்து மற்றும் சுதேச இராஜாங்க அமைச்சருமான எம்.சீ பைஸால் காசிம் பிரதம அதிதியாகக் கலந்து கொள்கிறார்.

    கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் எம்.ரீ. நிஸாம், நிந்தவூர் பிரதேசசபையின் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். அப்துல் ஜலீல், நிந்தவூர் கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம். சரீப்டீன், நிந்தவூர் பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் வை.எல். சுலைமாலெப்பை ஆகியோர் விசேட அதிதியாகவும், முன்னாள் சுகாதார, ஊட்டச்சத்து மற்றும் சுதேச இராஜாங்க அமைச்சர் எம்.ரீ. ஹஸன் அலி, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் ஆகியோர் சிறப்பு அதிதியாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

    கல்லூரி அபிவிருத்திக் குழுவினர், பழைய மாணவர் சங்கம், சக ஊழியர்கள், மற்றும் மாணவர்கள் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வில், பாரம்பரிய  விளையாட்டுக்களும் அன்றைய தினம் இடம்பெறவுள்ளதோடு, சிறுவர்களுக்கான நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்படவுள்ளன.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிந்தவூர் அல் - அஷ்ரக் தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நிகழ்வு நாளை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top