ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சில சர்வதேச பதவிகள்
மீது குறி வைத்துள்ளதாக அந்த கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு
பதவிகளில் ஒரு பதவி கிடைக்கும் என்பது உறுதியான பின்னர், ரணில்
விக்ரமசிங்க கட்சியின் தலைவர் பதவியை துறப்பார் என கூறப்படுகிறது.
விக்ரமசிங்க,
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் பதவி மற்றும் ஜெனிவா ஐ.நா மனித
உரிமை ஆணைக்குழுவின் செயலாளர் பதவிக்கு அடுத்த பதவியான துணை ஆணையாளர்
பதவியை எதிர்பார்த்துள்ளதாக பேசப்படுகிறது.
இந்த பதவிகளை
பெற்றுக்கொள்வது தொடர்பான நடவடிக்கைகளை அவர் ஏற்கனவே எடுத்துள்ளதாகவும்
கிடைக்கும் முடிவுகளுக்கு அமைய ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின்
தலைவர் பதவியில் இருப்பது அல்லது விலகுவது குறித்து தீர்மானிக்கப்படும்
எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எது எப்படி இருந்த போது விக்ரமசிங்க
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு வரை கட்சியின் தலைவர் பதவியை வகிக்க கட்சியின்
யாப்பின் மூலம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment