• Latest News

    February 06, 2020

    ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் பதியுதீனின் விளக்கமறியல் நீடிப்பு

    நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் பதியுதீனின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
     
    கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் சந்தேகநபரை இன்று ஆஜர்படுத்திய போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதன்போதே அவரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மன்னார் - தலைமன்னார் பகுதியில் உள்ள 240 இலட்சம் பெறுமதியான நிலமொன்றிற்கு போலி உறுதிப்பத்திரம் தயாரித்து மோசடி செய்ததாக தெரிவிக்கப்பட்டு இவர் கடந்த 22ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் பதியுதீனின் விளக்கமறியல் நீடிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top