சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி ஆற்றிய உரை சிறந்தது என்பதை
ஏற்றுக்கொள்வதாகவும் எனினும் பேச்சை விட செயலே முக்கியமானது எனவும்
நாடாளுமன்ற உறுப்பினர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்துள்ளாார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
தற்போதைய
அரசாங்கம் பல்வேறு கதைகளை கூறியும், ஊடக கண்காட்சிகளை நடத்தி மக்களின்
பிரச்சினைகளை மறக்க செய்து வருகிறது. பொய்களை புனைந்து ஆட்சி அதிகாரத்தை
கைப்பற்றுவது இலகுவானதாக இருந்தாலும் பொய்களால் நாட்டை முன்நோக்கி கொண்டு
செல்ல முடியாது.
அரசாங்கம் விடுதலை செய்வதாக கூறிய படையினரை சுதந்திர தினத்தில் கூட ஏன் விடுதலை செய்யவில்லை எனவும் பரணவிதான கேள்வி எழுப்பியுள்ளார்.

0 comments:
Post a Comment