• Latest News

    February 05, 2020

    பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராம்நாயகவின் குரல் பதிவுகளை தர மறுக்கின்றனர் : ஹிருனிகா எம்.பி

    பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராம்நாயகவின் குரல் பதிவுகள் ஹன்சார்ட் பிரிவிற்கு வழங்கப்பட்டதாக கூறியும்  அவற்றை எமக்கு கொடுக்க மறுக்கின்றனர். ஆளும் தரப்பின் குரல் பதிவுகள் இருப்பதால் இப்போது குரல் பதிவுகளை மூடி மறைக்கப்  பார்க்கின்றனர் என சபையில் ஹிருனிகா பிரேமசந்திர எம்.பி இன்று சபையில் கூறினார். 
    ஹன்சார்ட் பிரிவிற்கு ரஞ்சன் ராமநாயக எம்.பியின் குரல் பதிவுகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பாராளுமன்ற நூலகத்திற்கு சென்று இதனை கேட்டால் எமக்கு தர மறுக்கின்றார்கள். ஏன் எனக் கேட்டால் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைத்தால் மட்டுமே எமக்கு தர முடியும் என கூறுகின்றனர். 
    கடந்த காலங்களில் மிகவும் மோசமான எம்மீது அவமதிப்பு கருத்துக்களை கூறினர். ரஞ்சன் ராமநாயக எம்.பி சபையில் பேசியதை அடுத்து ஆளும்  தரப்பின் உறுப்பினர்களின் குரல் பதிவுகளும் உள்ளதாக கூறியதை அடுத்து இவ்வாறு மூடி மறைப்பது மோசமான செயற்பாடாகும் என்றும் கூறினார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராம்நாயகவின் குரல் பதிவுகளை தர மறுக்கின்றனர் : ஹிருனிகா எம்.பி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top