உலக நாடுகளை விழி பிதுங்க வைத்து வரும் கொரோனா வைரஸ், இலங்கையிலும்
நாளுக்கு நாள் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலையில், இலங்கையில்
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது என
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க
தெரிவித்தார்.
இன்று மூவர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதற்கமைய பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 97 இலிருந்து 100 ஆக உயர்ந்துள்ளது எனவும் அவர் கூறினார்.
227 பேர் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை,
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இருவர் ஏற்கனவே குணமடைந்து தமது
வீடுகளுக்குச் சென்றுள்ளனர் எனவும், 98 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்து
சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் அவர் மேலும் கூறினார்.

0 comments:
Post a Comment