ரயில் சாரதிகள் இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளைய தினம் நள்ளிரவு 12
மணி வரை சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக லோக்கோ
மோட்வ் ஒபரேட்டிங் பொறியியலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் இந்திக
தொடங்கொட தெரிவித்துள்ளார்.
சங்கம் இன்று மதியம் கூடி இந்த தீர்மானத்தை எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
ரயில்
சாரதிகள் ரயிலில் ஹெரோயின் போதைப் பொருளை கடத்திச் செல்வதாக அமைச்சர் விமல் வீரவன்ச சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பை காட்டும் வகையில்
இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் இந்திக தொடங்கொட குறிப்பிட்டுள்ளார்.
ரயில்
சாரதிகளின் இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு ரயில் கட்டுப்பாட்டாளர்கள்,
ரயில் வழிக்காட்டுனர்கள், ரயில் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் ஆகியோர்
ஆதரவு தெரிவித்துள்ளதாக ரயில் கண்காணிப்பு அதிகாரிகளின் தொழிற்சங்க
கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லால் ஆரியதிலக்க தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment