• Latest News

    March 03, 2020

    பொதுஜன பெரமுனவின் பொதுத்தேர்தல் பிரசாரம் இம்முறை மதமாற்ற சட்டமூலத்தை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படப்போவதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவிக்கிறது.

    பௌத்த மதத்தினர் ஏனைய மதங்களுக்கு மாற்றப்படுகின்றனர். இதனை தடுக்கவேண்டும் என்ற கோசத்துடன் பொதுத்தேர்தல் பிரசாரம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த செய்தித்தாள் கூறுகின்றது.

    நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு மஹிந்த ராஜபக்சவுடன் முக்கிய பௌத்த பிக்குகள் உடனிருந்தனர். இதன்போது மதமாற்ற சட்டமூலம் தொடர்பான கருத்தாடல்கள் இடம்பெற்றன

    இந்தநிலையில் பௌத்த சபையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய ராஜபக்ச சிங்கள பௌத்த நாடு அச்சத்தை எதிர்நோக்குகிறது என்ற வசனத்தை பேசியிருந்தார்.

    போதைவஸ்துக்களை பாடசாலை சிறார்களுக்கும் ஏனையவர்களுக்கும் வழங்கி பரம்பரையான பௌத்தர்கள் வேறு மதங்களுக்கு மாற்றப்படுகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

    2006ம் ஆண்டு மதமாற்ற யோசனை முன்வைக்கப்பட்டபோதும் உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தினால் அது முடங்கிப்போயுள்ளது.

    இதேவேளை பௌத்த மதத்தை பற்றி பேசும் மஹிந்த ராஜபக்சவின் மனைவி மற்றும் மகன்மாரில் ஒருவரின் மனைவி உட்பட்டவர்கள் பல்மதங்களை கொண்வர்கள் என்று ஆங்கில செய்தித்தாள் சுட்டிக்காட்டியுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top