வெளிநாடுகள், வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களது பிரதேசத்திற்கு
வருகை தந்தால் உடன் அறிவிக்குமாறு கிண்ணியா பொது சுகாதார வைத்திய அதிகாரி
டாக்டர் ஏ.எம்.எம்.அஜீத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
தற்போது
வரைக்கும் வெளிநாடுகளில் இருந்து கிண்ணியா பகுதிக்குள் 75 நபர்களும், வெளி
மாவட்டத்தில் இருந்து 16 நபர்களும் வருகை தந்துள்ளார்கள்.
கொழும்பு, புத்தளம், கம்பஹா, நீர்கொழும்பு போன்ற வெளி மாவட்டங்களில் இருந்தே குறித்த 16 பேரும் வருகை தந்துள்ளார்கள்.
இவர்களை
தொடர்ந்தும் பொது சுகாதார பரிசோதகர்கள் கண்காணித்து வருவதாகவும்
தொடர்ச்சியாக 14 நாட்கள் அவர்களது அனைத்து வித நடவடிக்கைகளும்
கண்காணிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக பொது மக்கள் அச்சமடையாது பூரண ஒத்துழைப்புக்களை வழங்குங்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 comments:
Post a Comment