• Latest News

    March 05, 2020

    ரவூப் ஹக்கீமும் ஹஸன்அலியும் சந்தித்து பேச்சுவார்த்தை

    முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளருமாகிய எம்.ரி. ஹசனலிக்கும் இடையே சந்திப்பொன்று கொழும்பில் நேற்று நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது தற்போதைய அரசியல் சூழ்நிலை பற்றி பேசப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
    தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் வேந்தது பேராசிரியர் அச்சி முஹம்மட் இஷாக்கின் இல்லத்தில் இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது. முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும், ஹஸன்அலிக்குமிடையே முரண்பாடுகள் ஏற்பட்ட போது பேராசிரியர் இஷாக்கின் தலைமையில் அவரது இல்லத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
    இச்சந்திப்பின் போது பல விடயங்களை பேசப்பட்டுள்ளன. குறிப்பான ஹஸன்அலியை மீண்டும் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு ரவூப் ஹக்கீம் அழைப்பு விடுத்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
    கட்சியின் யாப்பில் ஹஸன்அலி கேட்டுக் கொள்ளும் திருத்தத்தை மேற்கொள்வதற்கு தயராக இருப்பதாகவும் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
    ஆயினும், முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொள்வதற்கு பதிலாக ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் சார்பில் முஸ்லிம் கட்சிகளின் ஒற்றுமை என்ற அடிப்படையில் ஒற்றுமைப்படுவதற்கும், பொதுத் தேர்தலை எதிர் கொள்வதற்கும் தயாராக இருப்பதாக ஹஸன்அலி தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
    இதற்குப் பதிலளித்த ஹசனலி, தான் தற்போது செயலாளராகப் பதவி வகிக்கும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு சார்பில் மு.கா.வுடன் பேசுவதற்குத் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ரவூப் ஹக்கீமும் ஹஸன்அலியும் சந்தித்து பேச்சுவார்த்தை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top