மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளை , களுவாஞ்சிக்குடி , கல்லாறு
உட்பட்ட பல பகுதிகளில் கிணறு வற்றுவதால் ஆபத்து ஏற்படும் நிலைமை இல்லையென
வளிமண்டலவியல் அதிகாரிகளும் , இடர் முகாமைத்துவ அதிகாரிகளும் சற்றுமுன்
கொழும்பில் தெரிவித்தனர்.
வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி ஷானிக்கா
திசாநாயக்க மற்றும் இடர் முகாமைத்துவ நிலைய அதிகாரி பிரதீப் கொடிப்பிலி
ஆகியோரிடம் இதுபற்றி கேட்டபோது அவர்கள் அளித்த விளக்கம் வருமாறு ,
“இது சாதாரண காலநிலை மாற்றத்தால் வருவதாக நாங்கள் கருதுகிறோம்.பூமியதிர்ச்சி
எங்கும் ஏற்படவில்லை.கடலும் உள்வாங்கவில்லை .அதனால் சுனாமி ஆபத்தும்
இல்லை.சில நாட்களுக்கு முன்னர் கூடுதலான தண்ணீர் வந்து கிணறுகள் நிறைந்தன
என்றும் கேள்விப்பட்டோம். எனவே மக்கள் அச்சமடைய தேவையில்லை…”
என்று தெரிவித்தனர்.
thamilan -

0 comments:
Post a Comment