அவர் அமைச்சர் டளஸ் அழகப்பெருமவுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இச்சந்திப்பின் போது மின்சாரத் துறை உட்பட இலங்கையுடன் வலுவான மற்றும் பன்முக கூட்டாண்மைக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே வலியுறுத்தினார்.
இரு நாடுகளுக்கும் இடையே தற்போது விவாதத்தில் உள்ள மின் திட்டங்களில் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கான வழிகள் உட்பட இரு நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர உறவுகள் குறித்தும், பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவர்கள் கலந்துரையாடினர்.
புதுடெல்லியில் 2018 மார்ச் மாதம் நடைபெற்ற சர்வதேச சூரிய கூட்டணி ஸ்தாபக மாநாட்டின் போது அறிவிக்கப்பட்ட மூன்று சூரிய மினசார திட்டங்களுக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கடன் வசதியை இலங்கைக்கு வழங்குவதற்குரிய வாய்ப்பை தெரிவிக்கும் கடிதத்தின் நகலையும் உயர் ஸ்தானிகர் ஒப்படைத்தார்.
கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கூற்றுப்படி, நாடு முழுவதும் 20,000 வீடுகள் மற்றும் 1,000 அரசு கட்டிடங்களுக்கான சுமார் 60 மெகாவாட் மனிவலுவைக் கொண்ட சூரிய மின்சார கூரை மண்டலங்களுக்கான நிதிகளும் இதில் உள்ளடங்கும். மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையத்திற்கு நிதி வழங்கும் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
ஒட்டுமொத்த எரிசக்தி உற்பத்தியில் சூரிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பங்கை மேம்படுத்துவதற்காக 100 மில்லியன் அமெரிக்க டாலர் இந்தியா மற்றும் இலங்கையின் தேசிய முன்னுரிமைகளுக்கு ஏற்ப அமைய உள்ளதாகவும் இந்நதிய உயர் ஸ்தானிகர் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment