அதன்படி வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவரும், தாதியரும், உழியர் ஒருவருமே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இதேவேளை அகலாவத்தை சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலத்தைச் சேர்ந்த ஒரு பொது சுகாதார பரிசோதகரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.
அத்துடன் மேல் மாகாணத்தில் மேலும் நான்கு பொலிஸ் அதிகாரிகளும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி தற்போது மேல் மாகாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கையானது 260 ஆக உயர்வடைந்துள்ளது.
இதற்கிடையில் ஆறு பொலிஸ் அதிகாரிகள் குணமடைந்துள்ள நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த பொலிஸாரின் எண்ணிக்கையும் 254 ஆக உயர்வடைந்துள்ளது.
இதுவரை 335 பொலிஸார் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், 1,484 அதிகாரிகள் சுய தனிமைப்படுத்தலிலும் உள்ளனர்.
27 அதிகாரிகள் சுய தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவுசெய்துள்ள நிலையில் 1,457 பொலிஸ் அதிகாரிகள் மாத்திரமே தற்போது தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

0 comments:
Post a Comment