• Latest News

    November 30, 2020

    சுகாதார வழிமுறைகளை பேணாவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

    எஸ்.பி.அக்தர் -

    நிந்தவூர் பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்ட மொன்றினை நிந்தவூர் பொது சுகாதார வைத்திய பணிமனையினால் மேற்கொள்ளப்பட்டள்ளது.

    நிந்தவூர் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி திருமதி தஸ்லிமா பசீர் தலைமையில் முன்னெடுக்கப்படும் இந்நிகழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. 

    நிந்தவூர் பிரதேசத்திலுள்ள வியாபார நிலையங்கள், அங்காடி வர்த்தகத் கடைகள் போன்றவற்றிக்கு நேரடியாக விஜயம் செய்து கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறும் வழிமுறைகளை எடுத்துக் கூறுவதுடன், வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது சமூக இடைவெளியை முழுமையாக பேணுமாறு வலியுறுத்தப்பட்டும் வருகின்றன.

    அத்தோடு, பொது மக்களுக்குரிய விழிப்புணர்வுகள்  வீதிகள் தோறும் ஒலிபெருக்கிகளின் மூலமாக அறிவுறுத்தல்கள் செய்யப்படுகின்றன. 

    இதே வேளையில், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோர்கள் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொண்டும் வருகின்றனர்.

    சுகாதார வழி முறைகளை பின்பற்றாக வியாபார நிலையங்கள், பொது மக்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதுடன், வியாபார நிறுவனங்களின் அனுமதிப்பத்திரங்களையும் இரத்து செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.





    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சுகாதார வழிமுறைகளை பேணாவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top