• Latest News

    November 30, 2020

    நிந்தவூர் பொதுமக்களுக்கு அவசர அறிவித்தல்

    (ஏ. ஷபாஅத் அஹமத்)

    தற்போது நாடுபூராகவும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக நிந்தவூர் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தற்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நிந்தவூர் பிரதேச  சபை, நிந்தவூர் சுகாதார  

    அதிகாரி அலுவலகம் மற்றும் நிந்தவூர் ஜும்ஆ பள்ளிவாயல் ஆகியன இணைந்து  பின்வரும் தீர்மானங்களை எடுத்துள்ளன.

    இத்தீர்மானங்கள் அனைத்தும் 01.12.2020 ந் திகதி தொடக்கம் 07.12.2020 வரையான ஒரு வார காலத்திற்கு நடைமுறைப்படுத்தப்படும்.

      1.  சகல சிகை அலங்கார நிலையங்கள் ( சலூன் ) அனைத்தும் ஒரு வார காலத்திற்கு மூடப்பட்டிருக்கும்.

      2.  பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் மற்றும் வியாபார நிலையங்கள் அனைத்திலும் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டு, சமுக இடைவெளி பேணப்படல் வேண்டும்.

      3.  நிந்தவூர் பிரதேச சபை எல்லைக்குள் வியாபார நடவடிக்கைகளுக்காக வருபவர்கள் ஒரு வார காலத்திற்கு தங்களது நடவடிக்கைகளிலிருந்து  தவிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

      4.  நிந்தவூர் பிரதான வீதியின் நுழைவாயில் மட்டுமே பயன்படுத்தப்படல் வேண்டும். ஏனைய உள்ளக வீதிகளான கடற் கரை வீதி, வெட்டாறு 2ம்குறுக்கு பாலம் அமைந்துள்ள வீதி போன்றவை தற்காலிகமாக மூடப்படுகிறது.

    இந்நடைமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்றுமாறு  நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் ஏ.ஏம்.தாஹிர் அவர்கள் பொதுமக்களைக் கோரியுள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிந்தவூர் பொதுமக்களுக்கு அவசர அறிவித்தல் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top