• Latest News

    March 23, 2021

    முஸ்லிம் சமூகத்திற்கு பிரதிநிதித்துவம் வழங்கவே தேசிய பட்டியலில் இப்றாஹிமுக்கு இடம் வழங்கினோம் - அனுரகுமார திஸ்ஸாநாயக்க ஹிரு ரிவி பேட்டியில் தெரிவிப்பு

     இப்ராஹிமிற்கான தேசிய பட்டியல் முஸ்லிம் சமூக பிரதிநிதி என்ற அடிப்படையேலே வழங்கினோம். அரசியலின் வெற்றியில் கலாசாரம், பிணைப்பு, நோக்கு, கல்வி, இலட்சியம் என்பன செல்வாக்கு செலுத்துகின்றது. இந்நாட்டிற்கு தேவை இலஞ்சம், ஊழல் மோசடிகள் செய்கின்ற அரசியல்வாதிகளால்ல, நாட்டிற்கு தேவை இலட்சியம், நோக்கு மற்றும் அவற்றிற்காக உழைக்கின்ற அரசியல்வாதிகளாகும். நாம் அவ்வகையில் துறைமுக விற்பனைகள், காடழிப்பு உட்பட நம் நாட்டிற்கு பாதகமாக அமைகின்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும் அதற்கெதிராக குரல் கொடுக்கிறோம். என்று ஜே.வி.பி தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

    நேற்றிரவு (22.03.2021) இடம் பெற்ற சலகுண நிகழ்ச்சியிலே இவ்வாறு தெரிவித்தார்.

    மேலும் கருத்து தெரிவிக்கையில்,

    நாட்டில் பௌத கொள்கை என்றால் உதவி செய்தல், சமாதானம், சகவாழ்வு போன்ற பண்புகள் காணப்பட வேண்டும். ஆனால் பௌத மத அரசியல்வாதிகளை அவதானித்தால் திருடர்களாக, மோசடி செய்பவர்களாக, மக்களை ஏமாற்றுபவர்களாக உள்ளனர். அதாவது தம்மிடமுள்ள இவ்வாறன பண்புகளை மறைக்க அவர்கள் தங்களை பௌத தலைவர்களாக கூறிக் கொள்கின்றனர். ஆனால் நான் அவ்வாறானவன் அல்ல. நான் பௌத கொள்கைகளை பின்பற்றும் தலைவனே ஆனால் எம்மை பௌதத்திற்கு எதிரானவர்களாகவே அரசியலில் காட்ட முற்படுகின்றனர்.

    ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபர் இப்ராஹிம் அவர்களுக்கு 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தேசிய பட்டியல் வேட்பாளராக பெயர் குறிப்பிட்டமை பற்றி தெரிவிக்கையில்,

    அப்போது அவர் ஜனாதிபதி, பிரதமர், உட்பட வர்த்தக அமைச்சர் ஆகியோர்களிடம், ஏற்றுமதி துறைசார் விசேட சன்மானங்கள் பெற்றவர். மேலும் அன்று புலனாய்வு பிரிவில் கூட இவர் தீவிரவாதத்துடன் தொடர்புடையவர் என்று அறிக்கைகள் இருக்கவில்லை.

    மேலும் அவரிடமுள்ள பணத்திற்காக நாம் அவருக்கு வேட்பாளர் பட்டியல் வழங்கவில்லை மாறாக நாம் முஸ்லிம் சமூகத்திற்கு பிரதிநிதித்துவம் வழங்கவே தேசிய பட்டியலில் அவருக்கு இடம் வழங்கினோம். மேலும் கட்சியின் தீர்மானம் எடுத்தல் போன்ற விடயங்களில் அவர் செல்வாக்கு செலுத்தவில்லை.

    என்றாலும் அவருக்கு ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் அவரை பாதுகாக்க நாம் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ள மாட்டோம்.

    தற்போது பாதுகாப்பு அமைச்சர் என்னை விசாரிக்க வேண்டும் என்றார். ஏன் இந்த அவசரம் ஏற்பட்டது. நான் கூறுகிறேன் அவர் ஒரு புஸ் வெடில் அதாவது அரசாங்கத்திற்கு ஏதாவது பிரச்சினைகள் ஏற்படும்போது இவ்வாறான செய்திகளை உருவாக்கி விடுகின்றனர்.

    ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விசாரணைக்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மூலம் விசாரணை இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் எனக்கோ எமது கட்சி உறுப்பினர்களுக்கோ ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் அழைப்புகள் வரவில்லை. மேலும் குறித்த அறிக்கையில் பல குறைபாடுகள் உள்ளன.

    1954 ஆம் ஆண்டு முதல் முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து செயற்படும் ஜமாத்தே இஸ்லாமி எம்முடன் இணைந்து சிறிது காலம் சேவையாற்றினர் மேலும் அவர்கள் ஜனாதிபதித் தேர்தலின்போது ஒதுங்கி விட்டனர். என்றாலும் அவர்களுடன் சேவையாற்றிய காலத்திலும் தீவிரவாதத்துடன் அவ்வாறான தொடர்புகள் இருந்ததாக அறிக்கைகள் வரவில்லை.

    மேலும் அரசியல் பழிவாங்கல் – ஜனாதிபதி ஆணைக்குழு, விசாரணைகள் பற்றியும் தனது விமர்சனத்தை முன்வைத்தார்.

    முழுமையான உரையாடலை அவதானிப்பதற்கு,


     

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முஸ்லிம் சமூகத்திற்கு பிரதிநிதித்துவம் வழங்கவே தேசிய பட்டியலில் இப்றாஹிமுக்கு இடம் வழங்கினோம் - அனுரகுமார திஸ்ஸாநாயக்க ஹிரு ரிவி பேட்டியில் தெரிவிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top