• Latest News

    March 22, 2021

    காடு அழிக்கப்பட்டுள்ளது உண்மை! அமைச்சருக்கு தேரர் பதில்

    காடழிப்பு பிரசாரம் பொய் என தெரிவித்த இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவுக்கு அதே மேடையில் வைத்து காடழிப்பு உண்மை என பஞ்சாதிஸ்ஸ தேரர் பதிலடி கொடுத்துள்ளார்.

    ஹம்பாந்தோட்ட கீழ் அந்தரவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்விலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

    ரம்பக்கன் ஓயா - பொல்லேபெத்த பிரதேசத்தில் 5750 ஏக்கர் காடு அழிக்கப்பட்டுள்ளதாக வௌியிடப்பட்டுள்ள செய்தி பொய்யானது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு பொய் கூறும் வாய்களுக்கு சீன பட்டாஸ் போட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

    பொல்லேபெத்த பிரதேசம் தனது கண்முன் இருப்பதாகவும் அங்கு காடுகள் அழிக்கப்படவில்லை எனவும் மரணங்கள் இல்லாத 100 ஏக்கர் நிலப்பகுதி காணப்படுவதாகவும் அங்கு அபிவிருத்தி முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    எனினும் அமைச்சர் ஆற்றிய உரைக்கு அதே நிகழ்வில் கலந்து கொண்ட களுத்துறை பஞ்சாதிஸ்ஸ தேரர் பதில் அளிக்கையில், காடு அழிக்கப்பட்டுள்ளது உண்மை எனவும் யானை செல்லும் வழி சேதப்படுத்தப்பட்டு விவசாய நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் 20,30,40 லட்சம் ரூபாவிற்கு இடம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் விவசாயம் செய்யும் நபரை பிடித்து கேட்டால் யாருக்கு இலஞ்சம் வழங்கி காணி பெற்றார் என்ற உண்மை வௌிவரும் எனவும் தெரிவித்தார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: காடு அழிக்கப்பட்டுள்ளது உண்மை! அமைச்சருக்கு தேரர் பதில் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top