• Latest News

    March 09, 2021

    அம்பிட்டியே சுமணரதன தேரர் ஊடக சந்திப்பில் நடத்தி அழுது புலம்பல்!

    கண்டி திகண பிரதேசத்தில் ஏற்பட்ட இனவாத கலவரம் சம்பந்தமாக ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் தம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமணரதன தேரர் நேற்று ஊடக சந்திப்பை நடத்தி அழுது புலம்பியுள்ளார்.

    ஆணைக்குழுவின் அறிக்கையின் 411 பக்கத்தில் அம்பிட்டியே சுமணரதன தேரரின் செயற்பாடுகள், திகண தெல்தெனிய சம்பவம் ஆகியவற்றுக்குத் தனியான ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

    அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

    நான் எனது உறவினரின் மரண சடங்கில் கலந்து கொள்ளவே கண்டிக்குச் சென்றேன்.

    மரண சடங்கிற்குச் சென்றதால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமாயின் கடவுளே அந்த குண்டு தாக்குதலை நடத்த வந்தவர்கள் எங்கே?.

    நான் சமய உரைகளை நடத்துவது தவறா?. இது என்ன தூஷணம்.

    நான் முப்பது ஆண்டுகள் யுத்தத்தை எதிர்நோக்கிய பிக்கு. எனக்கு ஒரு பொறுப்பு இருக்கின்றது.

    ஈஸ்டர் தாக்குதலை எதிர்நோக்கிய அப்பாவி கத்தோலிக்க மக்களுக்கு இறைவனின் ஆசீர்வாதம் மட்டுமே உள்ளது. சொர்க்கம் மட்டுமே. இதனைத் தவிர வேறு எதுவும் எஞ்சாது.

    ஆணைக்குழுவில் உள்ளவர்கள் எங்களைப் போன்று காட்டில் இருக்கும் அப்பாவிகள் மீது குற்றத்தைச் சுமத்தி, சிறையில் அடைத்த பின்னர், நாட்டில் ஜனநாயகம் ஏற்படுமா என ஜனாதிபதியிடம் கேட்கின்றேன்.

    எப்போதும் நாங்கள் எமக்கு ஏற்படும் அநீதி குறித்தே பேசினோம். எதிர்காலத்திலும் இப்படியே நடந்தால், கோவிட் தொற்றினால் சிறந்தது என்றே கூறவேண்டியுள்ளது என அம்பிட்டியே சுமணரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அம்பிட்டியே சுமணரதன தேரர் ஊடக சந்திப்பில் நடத்தி அழுது புலம்பல்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top