நிந்தவூரில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பொதுச் சந்தை ஒன்று நிர்மாணிக்கட்டுள்ளது. பெரும்தொகைப் பணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இப்பொதுச் சந்தையில் வியாபார நடவடிக்கைகளில் ஒரு சிலரே ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
இதனால், பொதுச் சத்தைக்கு வருகின்ற நுகர்வோர்களின் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால், இங்கு வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற வியாபாரிகள் பெரும் கஸ்டநிலைக்குள்ளாகிக் கொண்டிருக்கின்றார்கள்.
இதே வேளை, நிந்தவூர் மாந்தோட்டச் சந்தி மற்றும் அலியான் சந்தி ஆகிய இடங்களில் வியாபாரிகள் மீன் மற்றும் மரக்கறி விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
மாந்தோட்டச் சந்தியில் அதிகளவு வியாபாரிகள் வீதியின் இரு மருங்கிலும் விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதனால் பொதுப் போக்குவரத்து பெருமளவு பாதிக்கப்படுகின்றன. பொது மக்களும், வாகனங்களும் போக்குவரத்தை மேற்கொள்வதில் அசௌகரியங்களை எதிர் கொண்டு வருகின்றார்கள். அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை, இவ்வாறு மீன்களையும், பொருட்களையும் பொதுச் சந்தை ஒன்று இருக்கத்தக்கதாக தெருக்களின் ஓரங்களில் விற்பனை நடவடிக்கைளை மேற்கொள்வது பொதுச் சுகாதாரத்திற்கு பெரும் கேடாக அமைந்துள்ளது. கோவிட் 19 தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்குரிய சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத நிலைமைகளும் இங்கு காணப்படுகின்றன.
அத்தோடு அப்பிரதேசம் துர்நாற்றம் வீசிக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இங்கு விற்பனை செய்யும் பொருட்களின் சுகாதாரத் தன்மையிலும் பலத்த சந்தேங்கள் உள்ளன. முறையற்ற விதத்திலும், சுகாதாரத்திற்கு கேடு ஏற்படுத்தும் வகையிலும், பொதுப் போக்குவரத்திற்கு தடைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற இந்த தற்காலிக விற்பனையை தடை செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய பொறுப்பு நிந்தவூர் பிரதேச சபையின் கடமையாகும்.
அத்துடன், பொதுச் சுகாதாரத்தைப் பேண வேண்டிய பொறுப்பு நிந்தவூர் பொதுச் சுகாதார பணிமனையின் கடமையாகும். மேலும், பொதுப் போக்குவரத்திற்கு தடையாகவுள்ள தற்காலிக விற்பனைகளை அகற்றி பொதுப் போக்குவரத்தை சீர் செய்வது சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பாகும்.
ஆனால், பொறுப்பு வாய்ந்தவர்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்காதிருப்பது கவலைக்குரியதாகும். ஆதலால், தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
வாராந்த சந்தை
இதே வேளை, வாராந்த சந்தைக்கு அதிகளவு விற்பனையாளர்கள் பொருட்களை விற்பனை செய்வதற்க வருகை தருவதனால், அதிகளவு பொது மக்களும் பொருட்களை கொள்வனவு செய்வதற்க வருகை தருவது கனவத்திற்குரியதாகும்.
கோவிட் வைரஸ் தாக்கம்
கோவிட் வைரஸ் தாக்கம் ஏற்பட்ட போது பொதுச் சந்தையில் விற்பனை செய்யாது, பொது மைதானத்தில் விற்பனை நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. தற்போது கொவிட் வைரஸின் தாக்கம் குறைவடைந்துள்ளமையால் அரசாங்கம் பாடசாலைகள் மற்றும் அலுவலகங்களை திறந்து வழமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சுகாதார நடைமுறைகளுடன் அனுமதித்துள்ளது.
கோவிட் வைரஸ் தாக்கம் ஏற்பட்ட போது பொதுச் சந்தையில் விற்பனை செய்யாது, பொது மைதானத்தில் விற்பனை நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. தற்போது கொவிட் வைரஸின் தாக்கம் குறைவடைந்துள்ளமையால் அரசாங்கம் பாடசாலைகள் மற்றும் அலுவலகங்களை திறந்து வழமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சுகாதார நடைமுறைகளுடன் அனுமதித்துள்ளது.
தற்போது நாட்டின் பல பாகங்களிலும் பொதுச் சந்தைகள் சுகாதார நடைமுறைகளுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
அங்காடி வியாபாரத்திற்கு தடை
நிந்தவூர் அங்காடி வியாபாரத்தில் யாரும் ஈடுபடக் கூடாதென்ற தடையை நிந்தவூர் பிரதேச சபை 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் திகதி முதல் அமுல்படுத்தியுள்ளது. நிந்தவூர் பிரதேச சபை இத்தடையை விதிப்பதற்கு பின்வரும் காரணங்களை சுட்டிக் காட்டி இருந்தன.
அதாவது, நிந்தவூர் பிரதேச சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட மாந்தோட்ட சந்தி, அலியான் சந்தி மற்றும் நிந்தவூர் பிரதான வீதி ஆகியவற்றில் அனுமதியற்ற முறையில் நடைபெறும் அங்காடி வியாபார நடவடிக்கைகளை இன்று (2019.09.20 ) முதல் நிறுத்துவதற்கு நிந்தவூர் பிரதேச சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
![]() |
| 2020.03.07இல் மாந்தோட்டச் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்து |
![]() |
| 2020.03.07இல் மாந்தோட்டச் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்து |
குறிப்பிட்ட இடங்களில் நடைபெறும் வியாபார நடவடிக்கைகளால் வீதியால் பயணிக்கும் பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்திப்பதுடன், வீதி விபத்துக்களையும் சந்தித்து வருகின்றனர்.
இந்தப் பகுதிகளில் தற்போது வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வதனால் விற்பனை செய்யப்படும் மீன் மற்றும் இதர பொருட்களின் கழிவுகளை மிருகங்களும், பறவைகளும் பொது மக்களின் வீடுகளில் போட்டு சுற்றுச் சூழலை மாசுபடுத்துகின்றது. இதனால் பிரதேச சபையானது குறிப்பிட்ட இடங்களில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட (2019.09.28முதல்) தடைவிதித்துள்ளதுடன், இனிவரும் நாட்களில் பிரதேச சபையால் அமைக்கப்பட்டுள்ள பொதுச் சந்தையில் மாத்திரம் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவிவுறுத்தல் வழங்கியது.
இத்தடையுத்தரவு பிரதேச சபையினால் இன்றுவரைக்கும் அமுலில் உள்ள போதிலும், அதனை முறையாக அமுல்படுத்துவதிலும், சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் கரிசனை காட்டாதிருப்பது பொது மக்களுக்கு இழைக்கப்படும் அநியாயமாகும். பொதுச் சந்தைக்கு புறம்பாக வேறு இடங்களில் அனுமதியற்ற வகையில் அங்காடி வியாபார நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதனால் மீன் மற்றும் பொருட்களின் விலைகள் ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடும் போது அதிகமாகவே இருக்கின்றன. பொதுச் சந்தையில் வியாபார நடவடிக்கைகள் நடைபெறுமாக இருந்தால் பொது மக்களுக்கு மலிவான விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும்.
வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை
பிரதேச சபையானது 2019.09.20ஆம் திகதி அனுமதியற்ற அங்காடி வியாபாரத்திற்கு தடை விதித்து, பொதுச் சந்தையில் மாத்திரம் விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று கட்டளை பிறப்பித்த போதிலும், அதில் தளர்ச்சி நிலை ஏற்பட்டது. தொடர்ந்து குறிப்பிட்ட கட்டளையை அமுலில் வைத்திருக்கவில்லை. இதனால், வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாக நிந்தவூரின் பல இடங்களிலும் சட்ட விரோத பொதுச் சந்தைகள் தோற்றம் பெற்றன.
இதனால், பொதுச் சந்தையில் விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபடும் மீன் வியாபாரிகளும், ஏனைய வியாபாரிகளும் கடந்த 2020.09.28 பிரதேச சபையில் தவிசாளாரின் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தங்களின் நிலைமையை எடுத்துக் கூறினார்கள். இதன் போது அனுமதியில்லாத அங்காடி வியாபாரத்திற்கும், மாந்தோட்டச் சந்தி, அலியான் சந்தி உட்பட ஏனைய இடங்களிலும் மேற்கொள்ளப்படும் வியாபார நடவடிக்கைகளுக்கு தடை செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதாக வியாபாரிகளுக்கு உத்தரவாதம் வழங்கப்பட்டது. இச்சந்திப்பில் நிந்தவூர் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களும் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கது.
எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
கடந்த காலங்களில் பொதுச் சந்தைக்கு புறம்பாக மாந்தோட்டச் சந்தி, அலியான் சந்தி, பிரதான வீதிகளில் தற்காலிக இடங்களில் மீன் மற்றும் ஏனைய விற்பனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது, அந்த இடங்கள் பொலிஸாரின் உதவியுடன் அகற்றப்பட்டன.
![]() |
| மாந்தோட்டச் சந்தி |
![]() |
| பிரதான வீதி |
![]() |
| பிரதான வீதி |
இலங்கையை சுத்தமான சூழலைக் கொண்டுள்ள நாடாக மாற்ற வேண்டுமென்பதில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார். ஜனாதிபதியின் இந்த நல்ல கொள்கைக்கு நிந்தவூர் பிரதேசம் மாற்றமாகச் செயற்பட முடியாது. அதனால், பொதுச் சந்தைக்கு புறம்பாக அனுமதியற்ற வகையில் விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சகல அங்காடி வியாபாரிகளினதும் வியாபார நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கும், பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்தவும் நிந்தவூர் பிரதேச சபையும், நிந்தவூர் பொதுச் சுகாதார அலுவலகமும் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பொதுச் சந்தை ஒன்று உள்ள நிலையில் தெருக்களின் ஓரங்கள் சந்தைகளாக மாறிக் கொண்டிருப்பதனை அனுமதிக்க முடியாது. இதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இது விடயத்தில் நாம் தொடர்ந்தும் அவதானத்துடன் இருப்போம்.









0 comments:
Post a Comment