• Latest News

    August 11, 2021

    இலங்கையில் ஒரே நாளில் 118 பேர் கொவிட்ட தொற்றால் மரணம்! ஒரு நாளில் அதிக மரண சம்பவம் இதுவாகும்.

    நாட்டில் மேலும் 118 கோவிட் மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.

    நேற்றைய தினம் 09 -08-2021 , 118 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுடன் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    30 முதல் 59 வயது வரையிலான 17 மரணங்களும், 60க்கும் மேற்பட்ட வயதுடையவர்களில் 101 மரணங்களும் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.

    உயிரிழந்தவர்களில் 79 ஆண்களும், 39 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இதன்படி, நாட்டின் மொத்த கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 5340 ஆக உயர்வடைந்துள்ளது.




    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கையில் ஒரே நாளில் 118 பேர் கொவிட்ட தொற்றால் மரணம்! ஒரு நாளில் அதிக மரண சம்பவம் இதுவாகும். Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top