போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்புகளை கொண்டிருந்த விசேட அதிரடிப்படையின் சார்ஜன்ட் ஒருவரை அதிரடிப்படையின் விசேட குழுவினர் ராஜகிரிய பிரதேசத்தில் கைது செய்துள்ளனர்.
கேரள கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் 29 வயதான சந்தேகநபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் ராஜகிரிய பிரதேசத்தில் கடந்த 16 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.அந்த நபர் வழங்கிய தகவலுக்கு அமைய அவருக்கு போதைப்பொருளை வழங்கிய நபர் தொடர்பான தகவல் கிடைத்தது என அதிரடிப்படையினர் கூறியுள்ளனர்.
இந்த தகவலுக்கு அமைய கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மூலம் குறித்த நபரை ராஜகிரிய பிரதேசத்திற்கு வரவழைத்துள்ளனர். அங்கு வந்த நபர் விசேட அதிரடிப்படையின் சர்ஜன்ட் என்பது தெரியவந்துள்ளது.
ராஜகிரிய பிரதேசத்திற்கு வந்த சந்தேகநபரான சார்ஜன்ட் அதிரடிப்படையினரை கண்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார். பின் தொடர்ந்து சென்ற அதிரடிப்படையினர் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அதிரடிப்படை சர்ஜன்ட் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment