• Latest News

    April 04, 2022

    பிரதமரை தவிர ஏனைய அமைச்சர்கள் பதவி விலக தீர்மானம் - அமைச்சர் தினேஸ் குணவர்த்தன


     பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை தவிர்ந்த, அமைச்சரவையிலுள்ள அனைத்து அமைச்சர்களும் பதவி விலக தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

    அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுப்பெற்று வரும் பின்னணியில் இவ்வாறு அனைத்து அமைச்சர்களும் பதவி விலக தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பிரதமர் மஹிந்த ராஜபக்ச தொடர்ந்து பதவியில் நீடிப்பார் எனவும், ஏனைய அமைச்சரவை அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்கள் பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொழும்பில் விசேட அமைச்சரவை கூட்டமொன்று சற்றுமுன்னர் இடம்பெற்ற நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

    குறித்த அமைச்சரவை கூட்டமானது ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    மேலும், அமைச்சரவையில் எஞ்சியவர்கள் பதவி விலகுவதா அல்லது பதவியில் நீடிப்பதா என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பிரதமரை தவிர ஏனைய அமைச்சர்கள் பதவி விலக தீர்மானம் - அமைச்சர் தினேஸ் குணவர்த்தன Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top