• Latest News

    June 04, 2023

    வருமானத்தில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் திருடப்படுவதாக அமைச்சர் தெரிவிப்பு

    இலங்கை போக்குவரத்து சபை நாளொன்றுக்கு சுமார் 5000 பேருந்துகளை இயக்குவதாகவும், ஆனால் அவர்கள் நாளாந்தம் பெறும் வருமானத்தில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் திருடப்படுவதாக விசேட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

    இதனால் இலங்கை போக்குவரத்து சபைக்கு ஒரு பேருந்தினால் நாளொன்றுக்கு சுமார் 5000 ரூபா இழப்பு ஏற்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

    இந்தத் தகவல் தொடர்பில் தரைவழிப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் கேட்டபோது, ​​அந்தத் தரவுகள் உண்மை மற்றும் சரியானவை என தெரிவித்துள்ளார்.

    இந்நிலையை தடுக்கும் வகையில் பேருக்கு மற்றும் தொடருந்து சேவைக்கான பயணச்சீட்டுகளை பெறுவதற்கு QR முறையை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    ஆனால் அரசாங்கத்தின் சில உயர் அதிகாரிகள் அதனை கடுமையாக தடுத்து நிறுத்துவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

    மேலும், அரசாங்கம் ஏற்கனவே QR குறியீட்டை உருவாக்குவதற்கும் செயல்படுத்துவதற்கும் ஒரு பொது விலை மனு கோரலை வெளியிட்டுள்ளது.

    அதற்காக 12 நிறுவனங்கள் முன்வந்துள்ள போதிலும், இலங்கை போக்குவரத்து சபை திருட்டுக்களுக்கு தொடர்புடைய குழுக்களினால் இந்த நடவடிக்கை தடைப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

    எனினும் வெகு விரைவில் QR குறியீட்டு பயணச்சீட்டு அமுலுக்கு வரும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    Thanks - https://tamilwin.com/article/qr-code-bus-ticket-1685845559

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வருமானத்தில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் திருடப்படுவதாக அமைச்சர் தெரிவிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top